Advertisment

செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ பண்ணுங்க... உயரதிகாரியின் வேண்டுகோள்...

இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வையுங்கள். குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந் தேதி இதனை கடைபிடித்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

cell

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் குழந்தைகள் தினம் தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14-ந் தேதி) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருங்கள். இதை ஏதோ அன்றைய ஒருநாளுக்கு மட்டும் செய்யாமல், வாரத்திலோ அல்லது மாதத்திலோ கடைப்பிடியுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

cell phone child Officer Request switch-off
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe