விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (24). இவர் கடலூர் வண்டி பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, கடலூர் டவுனில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் இவருக்கும் அந்த கடையில் வேலை பார்த்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் உருவானது.

Cell phone store employee arrested in Villupuram

Advertisment

இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் காதலன் மீதுள்ள நம்பிக்கையில் அந்த பெண், தன்னுடைய அந்தரங்க புகைப்படத்தையெல்லாம் செல்போனில் அனுப்பியுள்ளார். இதற்கிடையில் காதலுக்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இளம்பெண் கலையரசன் மீது ஏற்பட்ட காதலை கைவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலையரசன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

செல்போன், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களும் மிக நல்ல செயல்களுக்கு ஒரு புறம் பயன்பட்டாலும் கூட இதுபோன்று குற்றச் செயல்களுக்கு சமூக சீர்கேடுகளுக்கு அதிகளவில் பயன்படுகிறது. இவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்த முறைகேடான செயல்கள்தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.