A cell phone that exploded while in his pants

Advertisment

ராணிப்பேட்டை அருகே உள்ள கொண்டகுப்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனது பேண்ட் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் மாணவர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பத்தில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் முனியாண்டி. இவரது மகன் முத்து. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் இவர் ஆன்லைன் கல்விக்காக 4 மாதங்களுக்கு முன்பு 12000 ரூபாய் மதிப்பில் ஆன்லைனில் புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனது பேண்ட் பைகளில் வைத்திருந்த செல்போன் வெடித்தது. இதனால் அவர் அணிந்திருந்த உடைகளில் தீபற்றி எரிந்தது. காயமடைந்த இளைஞரை அப்பகுதியில் இருந்தவர்கள் வாலஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.