Cell phone distracted attention; A government bus overturned

Advertisment

அண்மையில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் மயக்கம் அடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதே ராமநாதபுரத்தில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பேருந்து புறப்பட்டதிலிருந்து ஓட்டுநர் செல்போனில் யாருடனோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேசிக் கொண்டே சென்ற நிலையில், டிராக்டருக்கு வழி விடுவதற்காக பேருந்தை இயக்கிய போது பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது தெரியவந்தது.