Cell phone confiscation in moving train; A young girl died after tripping and falling down

Advertisment

சென்னையில் ரயிலில் பயணம் செய்த இளம்பெண் தன்னிடமிருந்து செல்போனை பறிக்க முயன்ற இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் ப்ரீத்தி. இவர் தினமும் கோட்டூர்புரத்தில் இருந்து இந்திரா நகர் வரைக்கும் பறக்கும் ரயிலில் பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி திருவான்மியூருக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் ப்ரீத்தி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த ப்ரீத்தி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து திருவான்மியூர் ரயில்வே போலீசார், ப்ரீத்தியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரைத்தீவிரமாகத் தேடி வந்தனர். செல்போனை ட்ராக் செய்ததில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், அடையாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவர் செல்போனை திருடியது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் திருவான்மியூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். செல்போன் பறிப்பில் இளம்பெண் நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.