திருமணமான பெண் ஒருவருக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை ஊர் மக்கள்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம், ஈசன்தங்கு பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு என்பவர் நாகர்கோவிலில் உள்ள துணிக் கடைக்கு சென்றிருக்கிறார். அந்த கடையின் உரிமையாளருடைய மனைவியின் செல்போனை தெரிந்து கொண்ட ராம்பிரபு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

cellphone - message

இதனை அறிந்த கணவர் கோட்டாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்நிலைய போலீசாரோ, இந்த புகாரை சைபர் கிரைம் போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்று அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மனைவிக்கு அந்த நபரிடம் இருந்து தொடர்ந்து பாலியல் தொல்லை வந்து கொண்டிருந்தது. இதையடுத்து ராம்பிரபுவிடம் பெண் குரலில் பேசி கடைக்கு வரசொல்லியிருக்கிறார் கணவர்.

Advertisment

இதனை நம்பி வந்த ராம்பிரபுவை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். பொதுமக்கள் அப்போது ராம்பிரபுவை சரமாரியாக அடித்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது ராம்பிரபுவை போலீசாரிடம் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.