Advertisment

மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் (படங்கள்)

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.

Advertisment

இந்த சூழலில் அவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை (04.05.2023) காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக மனோபாலாவின் மகன் தெரிவித்துள்ளார். பின்பு அவரது உடல் வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

tamil cinema passed away manobala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe