Advertisment

பின்னடைவை சந்தித்த பிரபலங்கள்

 Celebrities who have faced setbacks

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

Advertisment

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 111.30 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 297 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 227இடங்களிலும், மற்றவை 19இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 36 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக 3 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம் சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் பின்னடைவைசந்தித்துள்ளார். அதேபோல் கன்னியாகுமரியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தென்காசியில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேதொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் பின்னடைவைசந்தித்துள்ளார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னணியைசந்தித்துள்ளார். தேனியில் அமமுகவின்வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பின்னடைவில் உள்ளார்.நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வித்யாராணி பின்னடைவில் உள்ளார். பாமகசார்பில் போட்டியிட்ட திரைப்படஇயக்குனர் தங்கர்பச்சன்பின்னடைவை சந்தித்துள்ளார்.

dmdk admk Election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe