Advertisment

குமரி அனந்தன் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி (படங்கள்)

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான குமரி அனந்தன் (93) காலமானார். குமரி அனந்தன் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த்குமாரின் சகோதரும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும் ஆவார். சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனிற்றி நள்ளிரவு 12:30 மணிக்கு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நான்காம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குமரி அனந்தன் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Advertisment

குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு கட்சி பேதமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment
Tamilisai Soundararajan passed away kumari ananthan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe