Celebrities pray for Spb healing!

Advertisment

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கரோனா தொற்று காரணமாகதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிப்படைந்தது.அதன் பிறகு தொடர் சிகிச்சையின் மூலம், அவரது உடல்நிலைமுன்னேறியநிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கரோனா தொற்று காரணமாகசிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின்உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்,கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம்தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளநிலையில், "எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டுமென அடிமனதில் இருந்து வாழ்த்துகிறேன். தமக்காக எஸ்.பி.பி பாடியதற்கு நன்றி தெரிவித்து" பாலிவுட் நடிகர் சல்மான்கான் டிவிட்வெளியிட்டுள்ளார்.

Advertisment

Ad

"துயரமான நாட்களிலிருந்து எஸ்.பி.பி மீண்டு வர வாழ்த்துகிறேன்" என இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், அதேபோல், "எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திப்பதாக நடிகர் பிரசன்னா", "எஸ்.பி.பி குணமடைய மனமுருகி வேண்டுகிறேன் என பாடகர் கிரிஷ்", "எஸ்.பி.பி குணமடைய வேண்டுமென இரவு முழுவதும் பிரார்த்தனை செய்யுங்கள்" என இசையமைப்பாளர் தமன். "விரைவில் குணமடைந்து வாருங்கள் எஸ்.பி.பி சார்" என தயாரிப்பாளர் தனஞ்செயன், இப்படித் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்து வருகின்றனர்.