Advertisment

பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (படங்கள்)

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது உடலானது ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனையானது முடிந்து உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

governor singer tribute
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe