பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.
இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ராமராஜன், இயக்குநர் வெற்றிமாறன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடனக் கலைஞர் காயத்ரி ரகுராம், நடிகர் சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி, விஷால்,விஜய் ஆண்டனி, நடிகர் ஆனந்தராஜ், அதிமுகமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a13_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a11_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a14_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a16_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a15_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/a24.jpg)