Advertisment

சகஜானந்தா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும்- கே.பாலகிருஷ்ணன்!!

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் அவரது 129 பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மற்றும் கட்சினர் கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Advertisment
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் சாமி சகஜானந்தரின் 129 வது பிறந்தநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டி நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அப்போதே அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்ற அவரும் நடத்தப்படும் என்றார்.
ss

தற்போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சரியான உத்தரவு இல்லை என்று அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த முடியாது என்று மறுத்துள்ளார். சமூக பணியாற்றிய புரட்சியாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளும் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டால் அவர்களது பிறந்த நாள் விழாவை அரசு கொண்டாடுவதுதான் வழக்கம். அதே போன்று அரசு சார்பில் அமைக்கப்பட்ட பலமணி மண்டபங்களில் அதே போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஆனால் சுவாமி சகஜானந்தாவுக்கு மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு என்று தெரியவில்லை. வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை தமிழஅரசு அரசுவிழாவாக நடத்துவதற்கு உடனே ஆணை பிறப்பிக்க வேண்டும்.
Advertisment
ss
மேலும் மணி மண்டப வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் நிதியிலிருந்து ரூபாய் 26 லட்சம் ஒதுக்கீடு செய்து நூலகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பூங்கா மற்றும் குளங்களை சீர் செய்யும் பணியை என்எல்சி நிர்வாகம் செய்து வந்தது தற்போது பணியைப் பாதியிலேயே நிறுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணியை செம்மையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும். இதைவிடுத்து அவர்களை கைது செய்வது, சிறையில் அடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் எதிர்விளைவுகளை உண்டு பண்ணும். அரசுக்கு மாணவர்கள் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ அதைத் தாண்டி ஆசிரியர்களுக்கும் உண்டு எனவே அரசு தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பனை செல்வம், வாஞ்சிநாதன், மூர்த்தி, முத்து உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர். அதேபோல் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள், சகஜாநந்தா தோற்றுவித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நந்தனார் கல்விக்கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
CHITHAMPARAM K Balakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe