Advertisment

பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்-போலீசார் விசாரணை

 Birthday celebration by cutting the cake with knife-police investigation

Advertisment

பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அதுதொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிடும் ரவுடிகளை போலீசார் அவ்வப்போது கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் திருமங்கலத்தைச் சேர்ந்த அனஸ்ராஜ் என்பவன் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவிய நிலையில், சென்னை காவல்துறையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டிய அனஸ்ட்ராஜ் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே பிரபல ரவுடி பினு உள்ளிட்ட பல்வேறு ரவுடிகள் இதுபோல் பிறந்தநாள் விழாக்களில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

birthday police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe