Celebrating Milad Nabi by feeding people

Advertisment

நபிகள் நாயகம் பிறந்தநாள் மிலாடி நபி விழாவில் இஸ்லாமிய மக்கள் 1500 கிலோ அரிசி மற்றும் 1000கிலோ ஆட்டிறைச்சி கொண்டு உணவு சமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர் அன்னதானம் வழங்கினர்.

வேலூர் மாவட்டம், வேலூர் சார்பனாமேடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்கள் தொடர் அன்னதானம் வழங்குவார்கள். அதே போல் இந்த ஆண்டும் 1500 கிலோ அரிசி மற்றும் சுமார் 1000 கிலோ ஆட்டுக் கறிகளை கொண்டு அசைவ உணவு சமைத்து சாதி மத பாகுபாடில்லாமல் அனைத்துதரப்பு மக்களுக்கும் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.

மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். மக்கள் பசியாற உணவளித்து மிலாடி நபி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.