Advertisment

குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டம்- இளைஞர் கைது

Celebrating cake cutting by handing a patak knife to the child- youth arrested

அண்மைகாலமாக பொதுவெளியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரமானது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்வர். சமீபமாக இதுபோன்று சம்பவங்கள் பெரிய அளவில் நிகழாத வண்ணம் இருந்த நிலையில், கோவையில் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்து அது தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குழந்தையின் கையில் பட்டாக்கத்தியைக் கொடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்குடி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவருடைய அண்ணன் மகனது பிறந்தநாளை கொண்டாடிய அஜீத் பட்டாக்கத்தியை குழந்தையின் கையில் கொடுத்து பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் போலீசார்அஜித்குமாரை கைது செய்துள்ளனர்.

Advertisment

Karaikudi police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe