Sidai Awards 2022 ... Award for Nakkiran Teacher!

Advertisment

மதுரையில் தொழில் முனைவோருக்காக 'CEDOI AWARDS NIGHT- 2022' என்ற விருது வழங்கும் விழா மதுரை வேலம்மாள் மஹாலில் நடைபெற்றது. இந்தவிழாவில் நக்கீரன் ஆசிரியருக்கு ‘ஹீரோ ஆஃப் ஜர்னலிசம்’ - ’பத்திரிகை துறையின் நாயகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதுரையை மையமாகக் கொண்டு, செயல்படுகிறதுCEDOI அமைப்பு. கட்டிடக்கலை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுக்கான கூட்டமைப்பான இதைத் தொடங்கி தலைமை தாங்கி வருபவர் தொழிலதிபர் ஏ.எஸ்.ரியாஸ். இந்த அமைப்பின் சார்பில் மதுரையில் பிரம்மாண்டமான விருது விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள் கலந்துகொண்ட இந்த விழா வெற்றிகரமானவர்களை கௌரவிக்கும் விதமாகவும் புதியவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய நக்கீரன் ஆசிரியர் 'கரோனாகாலத்தில் தாக்குப்பிடித்து தொழில் செய்துவரும்தொழில்முனைவோர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்' என்றார். இதனைத் தொடர்ந்து மதுரையில் அனைத்து தொழில்துறைகளிலும்சிறந்து விளங்கும் தொழில்முனைவோர்களுக்குசிறப்பு விருதுகள்கொடுக்கப்பட்டுகௌரவிக்கப்பட்டது.