டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த உத்தரவு!

CCTV in Tasmac Bars Order to fit the camera

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொறுத்த மதுவிலக்குத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “மக்களவைத் தேர்தலின் போது சர்ச்சைகள் ஏற்பட வாய்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். பார்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் அதற்கான புகைப்படங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தத்தவறும் பட்சத்தில் டாஸ்மாக் பார்களின் ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு மதுவிலக்குத்துறை ஆணையாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe