CCTV at polling stations ... State Election Commission instruction!

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை 5 மணியுடன் நிறைவுபெற்றது. 5 மணிக்கு மேல் தேர்தலில் தொடர்பில்லாத நபர்கள் ஊராட்சிகளிலிருந்து வெளியேற மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில்டாஸ்மாக்கடைகள்,பார்களைதிறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மொத்தமாக இந்த தேர்தலில் 24,417 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளில்சிசிடிவிஅமைக்கமாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு இந்த அறிவுறுத்தலை மாநில தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. வரும்அக்.6, 9 ஆகிய நாட்களில் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில்வாக்குப்பதிவைக்கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.