Advertisment

திருச்சி நகைக்கடை கொள்ளை... முகமூடி கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

திருச்சி லலிதாஜுவல்லரியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisment

 CCTV footage of Trichy jewelery robbery ...

இன்று திருச்சி கிளையில் உள்ள லலிதா ஜுவல்லரி கடையில் இன்று காலை ஒன்பது மணிக்கு முன்பக்க கதவை திறந்தபோது அதன் கீழ்தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே போலிசுக்கு தகவல் சொன்னார்கள். போலீஸ் வந்து நடத்திய விசாரணையில் உள்ளே சென்று பார்வையிட்டபோது பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு அதிலிருந்து கடைக்குச் சென்று கொள்ளையர்கள் அங்கிருந்த முதல் தளத்தில் மட்டும்36 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தற்போது தெரியவந்த நிலையில் முழு மதிப்பு விரைவில் தெரியவரும். இந்த கொள்ளை சம்பவத்தைதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த காட்சியில் விலங்குகளின் முகமூடிகளை மாட்டிய இரு நபர்கள் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர்களின் மொபைல் நெட்ஒர்க் பற்றியும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Advertisment

நள்ளிரவு 2.11 மணி முதல் காலை 3.15க்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

CCTV footage Investigation police thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe