/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_123.jpg)
சிவகங்கை மாவட்டம் செய்யாளூர் பகுதியைச்சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி பஞ்சு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில், தற்போது சாஸ்தா நகரில் தனிக் குடித்தனம் இருக்கின்றனர். இந்நிலையில் முருகானந்தம் - பஞ்சு தம்பதியர் கடந்த 8ஆம் தேதியன்றுமானாமதுரையில் நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கறிகளை வாங்க தங்களது டூவீலரில் சென்றனர்.
அதன்பிறகு, சாஸ்தா நகரில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து அன்றிரவு 7 மணி அளவில் மானாமதுரை சாலையைக் கடக்கும்போது,மனோஜ்குமார் என்கிற இளைஞர்அதே சாலையில் நேர் எதிராக வந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத முருகானந்தம் அந்த இளைஞரின் வாகனம் மீது பயங்கர வேகமாக மோதியுள்ளார்.
இந்த விபத்தில் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டுமானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகுமேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்துஇரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)