Advertisment

போக்சோவில் கைது செய்யப்பட்ட காவலர் தப்பியோடிய சிசிடிவி காட்சி; ஆத்தூரில் பரபரப்பு

 CCTV footage of arrested policeman absconding from POCSO; There is excitement in Attur

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சிறுமிஒருவரை கர்ப்பமாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட காவலர் ஒருவர்காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூரில் வசித்து வந்த பிரபாகரன் என்ற காவலர் சொந்த ஊரான திருவாச்சிக்கு சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியுள்ளார் காவலர் பிரபாகரன். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர் பிரபாகரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென காவல் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்த பிரபாகரன் வெளியில் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த நண்பர் உடன் ஏறி தப்பித்தார். இந்த காட்சிகள் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தப்பிச் சென்ற காவலர் பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe