Advertisment

தேவாலயத்தின் முன் நிர்வாண ஆட்டம்;சிசிடிவியில் சிக்கியது சைக்கோ கொலையாளியா?;அச்சத்தில் மார்த்தண்டம் பொதுமக்கள்!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தேவாலயம் முன்பு நடனமாடிய மர்ம நபர் தேவாலயத்தின் காவலாளியை கல்லால் தாக்கி சென்றுள்ள சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடு இரவில் நிர்வாண ஆட்டம் போட்ட அந்த மனிதர் மர்ம சைக்கோ நபராக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Advertisment

 Psycho

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கன்னியாகுமரியில் பரக்குன்று என்ற ஊரில் வசித்து வந்தசுந்தரராஜன் என்பவர் மார்த்தாண்டம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு பணியில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் வேட்டி மட்டும் அணிந்துகொண்டுநடந்து வந்துள்ளார். சற்று தொலைவில் யாரோ ஒரு நபர் தேவாலயபகுதிக்கு சரியாக உடை கூட இல்லாமல் வருவதை கண்டு அதிர்ந்த காவலாளி சுந்தரராஜன் அவரை அங்கிருந்து செல்லும்படி சத்தம் எழுப்பி உள்ளார்.

 Psycho

ஆனால் அந்த மர்ம நபர்தேவாலயத்தின் தோட்டப்பகுதியில் அங்கும் இங்கும் ஓடி காவலாளி அலைக்கழித்துள்ளான்.மேலும் எச்சரிக்கையை மீறி தேவாலயத்தின் முன் பகுதிக்கு சென்று நடனமாடியுள்ளான்.இப்படி நடனமாடிக் கொண்டிருந்த அந்த நபரை விரட்ட காவலாளி முயற்சித்தபோது காவலாளி அருகே சென்ற அந்த மர்ம நபர் அருகில் இருந்த பெரிய கல்லால் காவலாளியை தாக்கியுள்ளான்.அதன்பின் அவரை தாக்கிய அந்த கல்லை தேவாலயத்தின் முன் வைத்து உடைகளை களைந்து நிர்வாண ஆட்டத்தில் இறங்கியுள்ளான்.

 Psycho

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஏற்கனவே மார்த்தாண்டம் பகுதிகளில் பகலிலேயே குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை இதுபோன்ற மர்மநபர் ஒருவர் உடைத்துசென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல் பொதுமக்களையேஇது போன்ற ஒரு நபர் தாக்குவதாக அப்பகுதி மக்களிடையே ஒரு பெரிய பீதி கிளம்பியிருந்தது. இந்த நிலையில் தேவாலயத்தின் முன் நிர்வாண ஆட்டம் போட்ட அந்த மனிதர் தான்அந்த சைக்கோ மனிதராஎன மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதேபோல் அந்த மர்ம நபரால் தாக்கப்பட்ட காவலாளி சுந்தரராஜன் தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டநிலையில் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

psycho CCTV footage
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe