publive-image

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் என தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அதில், அனைத்து பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய வேன் மற்றும் பேருந்து போன்ற வாகனங்களில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். எச்சரிக்கை செய்யும் சென்சார் கருவியை பள்ளி வாகனத்தின் பின்புறம் பொருத்த வேண்டும். பேருந்துகளில் ஏறி செல்லும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.