2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும்,தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல்மீதான உரையைதொடங்கினார்.
தமிழகசட்டப்பேரவையில் 10 ஆவதுமுறையாக பட்ஜெட்தாக்கல் செய்துவருகிறார்ஓபிஎஸ். 15 ஆவதுசட்டப்பேரவையில் அதிமுகஅரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய அறிவிப்புகள்,புதிய திட்டங்கள்வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது தொடங்கியநிதியமைச்சர் ஓபிஎஸ்ஸின் உரையில்,
நடப்பு நிதியாண்டில் தமிழகஅரசின் கடன் 4.56 லட்சம் கோடியாகஇருக்கும்எனதெரிவித்தஓபிஎஸ்,
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
நீரை சிக்கனமாக பயன்படுத்திதிருத்திய நெல் சாகுபடி முறைக்கு27.18 லட்சம் ஏக்கராகவிரிவுபடுத்தப்படும். தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 6,500 கோடிரூபாய் ஒதுக்கீடு, 11.1 லட்சம் ஏக்கர் நெல் விதைப்பு முறை நாகை,திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கைக்கு விரிவுபடுத்தப்படும்.
பொது விநியோகதிட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு 400 கோடிமானியம்.மின்சார துறைக்கு20,115 கோடி,கல்விதுறைக்கு 34,181 கோடியும், தொல்லியல்துறைக்கு 39.93கோடியும், கீழடியில் புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடியும், பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடியும், உயர்கல்வி துறைக்கு5,052.84 கோடியும், மருத்துவதுறைக்கு 15,839 கோடியும்,பெண்கள் பாதுகாப்பானநிர்பயாதிட்டத்திற்கு தமிழக பட்ஜெட்டில் 71 கோடியும்ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல்தமிழக அரசு பெருந்துகளில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவல்துறைக்கு 8,876.57 கோடியும்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு405.68 கோடியும்,2020-21 ஆண்டில்சிறைத்துறைக்கு 329.74 கோடியும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல்நிலையங்கள் அமைக்கப்படும். 5 புதிய மாவட்டங்களில் 550 கோடியில்பெருந்திட்ட வளாகம் அமைக்க இடம் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. பேரிடர்மேலாண்மைக்கு 1,360 கோடிரூபாயும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவாசித்தார். அரசு பேருந்துகளில் மின்னனுபயணசீட்டுமுறை கொண்டுவரப்படும். பணமில்லா பரிவர்த்தனை பயண சீட்டு பெரும் முறைஅமல்படுத்தப்படும்என்றார்.