கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு முன்னபே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டன. அதேபோல, தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உருவானது.

Advertisment

cbse students all pass in-class 1 to 8

கரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதாலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் ஆல் பாஸ் செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சி.பி.எஸ்.சி. வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை சி.பி.எஸ்.சி. வாரியம் ஏற்றுகொண்டதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.