CBSE Plus 2 Exam Results Released!

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் இந்த ஆண்டு 92.71 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.79 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என்பதால் கல்லூரிச் சேர்க்கைகள் தாமதமாகும் என்ற தகவல்கள் முன்னதே வெளியாகி இருந்தது.

Advertisment

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின் மாணவர்கள் கல்லூரிகளில் சேர 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதால் வரும் ஜூலை 27ஆம் தேதி வரை பொறியியல் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.