ADVERTISEMENT

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடக்கம்

09:54 AM Mar 05, 2018 | rajavel


ADVERTISEMENT

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வை 4,453 மையங்களில் 16 லட்சத்து 38,552 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 4,510 பேர் மாற்றுத்திறனாளிகள். வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4,138 மையங்களில் 11 லட்சத்து 86,144 பேர் எழுதுகின்றனர். இதில் 2,846 பேர் மாற்றுத்திறனாளிகள். வெளிநாடுகளில் 71 மையங்களில் தேர்வு நடக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் மொத்தம் 28 லட்சத்து 24, 696 பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில்கொண்டு அவர்கள் தேர்வுக்கூடத்துக்குள் திண்பண்டங்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் லேப்-டாப் மூலம் தேர்வெழுத சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி அளித்துள்ளது. எனினும் லேப்-டாப்பில் இணைய வசதி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4-ம் தேதியும் 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 12-ம் தேதியும் நிறைவடைகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT