CBSE 10TH RESULTS REGIONAL WISE CBSE BOARD

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, மண்டலம் வாரியான மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

CBSE 10TH RESULTS REGIONAL WISE CBSE BOARD

அதன்படி, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 99.28% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்தது; 98.23% தேர்ச்சியுடன் பெங்களூரு மூன்றாமிடம் பிடித்தது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வில் 91.46% பேர் தேர்ச்சி; இது கடந்த ஆண்டை விட 0.36% அதிகம். மாணவிகள் 93.31%, மாணவர்கள் 90.14% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisment

குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 18,73,015 பேரில் 17,13,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.