Skip to main content

  மராமத்துப் பணியில் ஊழல் சிபிஐ விசாரனை வேண்டும் - வேதாரன்யம் விவசாயிகள் கோரிக்கை 

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
o

 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட்டு 30 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராத காரணத்தால் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 

 

கல்லணையில் இருந்து வெட்டாறு வழியாக தேவநதி மற்றும் ஓடம்போக்கி ஆறுகள் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரானது இதுவரை கடைமடைக்கு வந்துசேராத காரணத்தால் சுமார் 80ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை தெளித்தல் உள்ளிட்ட உழவு பணிகளை மேற்கொண்டுவிட்டு காவிரி நீருக்காக காத்திருக்கின்றனர். 

 

குடிமராமத்து பணிகளில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அதன் காரணத்தினால் மட்டுமே பல்வேறு வாய்க்கால்கள் இதுவரை தூர்வாரபடவில்லை என்று கூறும் விவசாயிகள் குடிமராமத்து பணிகளில் நடைபெற்ற ஊழல் குறித்து CBI விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

 

வேதாரன்யம் தமிழ்செல்வன் கூறுகையில்" வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் நாகையில் பாலையூர், செல்லூர், தெத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும், கீழ்வேளூர் தாலுக்காவில் சங்கமங்கலம், புலியூர், வடவூர், குறிச்சி போன்ற கிராமங்களுக்கும், வேதாரண்யம் தாலுக்காவில் முள்ளியாற்றில் தண்ணீர் திறந்துவிடாத காரணத்தால், பிராந்தியங்கரை, அண்டகத்துறை, உம்பளச்சேரி ஆகிய கிராமங்களுக்கும் இதுவரை தண்ணீர் வந்து சேராததால் வயல்வெளிகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. மேலும், சொற்ப அளவில் தண்ணீர் வரும் காரணத்தால் வயல்களில் தண்ணீர் பாயவில்லை. பாலையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கடன் வாங்கி   நிலங்களில விதை தெளித்து கருகிக்கொண்டிருக்கிறது.

 

முறைவைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும். காவிரி நீரை நம்பி உழவுபணிகள், விதை தெளித்தல் ஆகிய ஏற்பாடுகளை செய்துவிட்டு மழையும் இல்லாமல், காவிரி நீரும் வந்து சேராமல் வரட்சியே நீடிக்கிறது. 

 

பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கும்  இந்த சூழலில் கடைமடை பகுதியான நாகைக்கு காவிரி நீர் முறையாக வந்து சேரவில்லை. எனவே வெட்டாற்றில் இருந்து அதிக அளவிலான நீர் பாசனத்திற்கு திறந்துவிட்டால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை காக்கமுடியும் " என்கிறார்.
 

சார்ந்த செய்திகள்