குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த போது, சிப்காட் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் ஹரிஹரன் இவர் போராட்டத்திற்கு பின்பு பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னையில் இருந்த இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவர் சிப்காட் காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இவர் குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்பதால் இன்று காலை மதுரையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் எழு பேர் கொண்ட குழு இன்ஸ்பெக்டர் சம்பத்தின் வீடு இருக்கும் ஆறுமுகநேரி நகரில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சிபிஐ அதிகாரிகளின் சோதனை காலை முதல் தற்போது வரை நீடித்து வருகிறது.