Advertisment

சாத்தான்குளம் வழக்கு... நாளை முதல் விசாரிக்கிறது சிபிஐ...

 CBI to probe Sathankulam case tomorrow

சாத்தான்குளம் தந்தை-மகன்கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடிபோலீசாரால் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் நாளை முதல் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Advertisment

உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை சிபிஐ தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் ஒருபுறம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாளை முதல் சிபிஐ இந்த விசாரணை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்கசிபிசிஐடி அல்லது சிபிஐ15 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தானே வந்து விசாரணை மேற்கொண்டமதுரை உயர்நீதிமன்ற கிளைஇந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடிஅல்லது நெல்லை சரக நெல்லை சரக டிஐஜி விசாரணையை முன்னெடுக்க முடியுமா என்ற கருத்தை தெரிவித்தநீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.அதன் பிறகு இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதல் கட்டமாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.அதனையடுத்து நேற்று முன்தினம் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று சிபிஐமுதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்த நிலையில், நாளை முதல் சிபிஐ இந்த வழக்கில் விசாரணை தொடங்க இருக்கிறது.

CBI sathankulam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe