Advertisment

சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தகட்டம்... மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள்!!

 CBI officials in Madurai court

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீடு,அவரது உறவினர்கள், குடும்பத்தார் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் என பல்வேறு கட்டங்களாக விசாரணையை மேற்கொண்டு வந்திருந்த நிலையில்,அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் (காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன்,ரகு கணேஷ், காவலர்கள் முருகன்,முத்துராஜ் ஆகிய) 5 பேரையும், 7 நாள் காவலில்விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை தற்போது நடைபெற உள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் மதுரைநீதித்துறை நடுவர்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Advertisment

highcourt madurai CBI sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe