Advertisment

பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை!

f

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாக கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்து சென்றனர்.

Advertisment

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாக கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்துமரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதுதொடர்பாகவழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இந்நிலையில், சாமதுரை, செல்லதுரை, வெயில்முத்து ஆகிய 3 போலீசாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது முறையாக பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe