​protest

Advertisment

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிபிஐ இயக்குனர்அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்துஇரு அதிகாரிகளையும் கட்டாயவிடுப்பில் செல்ல உத்தரவிட்டப்பட்டு புதிய இயக்குனராக நாகேஷ்வர ராவை நியமித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இன்று டெல்லி, பாட்னா, புதுசேரி, பெங்களூர் மற்றும் பலஇடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தின் முன் காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆர்பாட்டத்தில் சிபிஐக்கு புது இயக்குனர் நியமனதிற்கு எதிராகவும் மத்திய அரசிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அங்கு போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.