Advertisment

சிபிசிஐடி கொலை வழக்கில் விசாரணைக்கு பயந்து தலைமறைவான குற்றவாளி திருச்சியில் கைது!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தனரெத்தினம் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது. வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென மாயமானார். இதனை தொடர்ந்து தனது கணவர் காணவில்லை என சாகுல்அமீது மனைவி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரைகாந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

Advertisment

cbcid suspect arrested in Trichy

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்ற கோரி சாகுல் அமீதின்மனைவி வழக்குத்தொடர இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Advertisment

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் சாகுல் அமீது மற்றும் அவரது மாமியாருக்கும் இடையேதகாத உறவுஇருப்பது தெரியவந்தது. இது தொடர்பான பிரச்சனையில் சாகுல் அமீதுவை அவரது சொந்த மைத்துனரை கொலை செய்து உடலை சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சுடுகாட்டில் புதைத்து தெரியவந்தது. இதனை அடுத்து சாகுல் அமீது மைத்துனர் உமர்பாரூக் அவரது நண்பரான பிரான்சிஸ் பிரபு உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

cbcid suspect arrested in Trichy

இந்த வழக்கு தற்போது திருச்சி மூன்றாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்த பிரான்சிஸ் பிறகு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார்.

அவர் சாட்சிகள் விசாரணைக்கு முறையாக கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் பிரான்சிஸ் பிரபுவை கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில் திருச்சி சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவா சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர் வலம்புரி ஆகியோர் பிரான்சிஸ்கோவில் தேடி வந்தனர். இந்த நிலையில் சங்கிலியாண்டபுரம் ஆலமரத்தடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரான்சிஸ் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த, நீதிபதி கர்ணன் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உமர்பாரூக் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டர் என்பது குறிப்பிடதக்கது.

murder police arrest CBCID
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe