Advertisment

பாலியல் தொல்லை புகார்... கராத்தே பயிற்சியாளர் கெபிராஜிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

CBCID probe into karate coach Kepraj

அண்மையில் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் புகார்களாக தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தனியார் பள்ளி கராத்தே பயிற்சியாளராக இருந்த கெபிராஜ் என்பவர் வீராங்கனையை போட்டிக்காக அழைத்துச் சென்று விட்டு வரும் வழியில் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவிகளும் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பயிற்சியாளர் கெபிரஜை போலீஸ் காவலில் எடுத்து இரண்டாவது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பயிற்சியாளர் மீது புகார் அளித்த வீராங்கனையிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

CBCID Investigation sexual harassment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe