Advertisment

காவல்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... சி.பி.சி.ஐ.டி அலுவகத்தில் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்...

 CPCID inquiry to DGP!

தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரைசி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில்,ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கடந்த 1 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிஏ.டி.எஸ்.பிகோமதி நியமனம் செய்யப்பட்டிருந்த சிலமணி நேரத்திலேயே, விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி இந்த வழக்கில்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி அலுவகத்தில்ஆஜராகியுள்ளார். பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற இருக்கிறது.

இந்தச் சம்பவத்தை தானாகஏற்று,இந்த வழக்கை விசாரிக்க முன்வந்தது சென்னை உயர் நீதிமன்றம்.நேற்று (12.03.2021) வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? பாலியல் புகார் கொடுக்கவந்தபெண் எஸ்.பியைதடுத்த செங்கல்பட்டுஎஸ்.பியை சஸ்பெண்ட் செய்தது ஏன்? என நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ்கேள்வியெழுப்பியதோடு, இதுதொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sexual Abuse police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe