Skip to main content

குற்றவாளிகளை நெருங்கியதா சிபிசிஐடி? - வேங்கை வயலுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலிஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் சிபிசிஐடி போலீசார் உண்மை அறியும் சோதனை அனுமதி பெறக் காத்திருக்கின்றனர்.

 

nn

 

இந்நிலையில் வேங்கை வயல் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையக்கூடாது என்பதற்காக கிராமத்தைச் சுற்றி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வேங்கை வயல் கிராமத்திற்குள் வெளியூரை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் வருவதால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கிராமத்தைச் சுற்றி சிறப்புக் காவல் படை காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்திற்குள்ளே செல்லும் நான்கு வழிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட இருப்பதாகவும் சிபிசிஐடி குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Son father by car for property

தூத்துக்குடியில் சொத்துக்காக தந்தையை மகனே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சின்னதுரை. ஆழந்தா எனும் கிராமத்தில் 80 வயதான கருப்பசாமிக்கு  சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை விற்ற முதியவர் கருப்புசாமி அதிலிருந்து வந்த 24 லட்சம் ரூபாயை சின்னத்துரையின் இரண்டு மகன்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன்கள் பெயரில் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு தந்தை கருப்புசாமியிடம் சின்னதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தோட்டத்திற்கு சாலையில் நடந்து  சென்று கொண்டிருந்த தந்தை கருப்பசாமி மீது சின்னதுரை காரை மோதிவிட்டு கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

முறையற்ற தொடர்பு விவகாரத்தில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Stabbing in affair of improper relationship; One person was lose their live

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முறையற்ற தொடர்பு விவகாரத்தில் கத்திக்குத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை இந்திரா நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவியின் சகோதரர் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கெளசல்யா என்பவருடன் திருமணம் மீறிய முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் கௌசல்யா இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனால் விக்னேஷ் மாமாவான கருப்புசாமிக்கும் கௌசல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கருப்புசாமியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெருந்துறை போலீசார் உயிரிழந்த கருப்புசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.