பள்ளியின் பின்னே முட்புதர் குகை... கஞ்சா போதையில் சக மாணவர்கள் மீது தாக்குதல்... திடுக்கிட வைக்கும் அரசு பள்ளி!

 cave behind the school ... Attack on fellow students intoxicated with cannabis ... Startling government school!

மாணவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. இதைவிட சக மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகம். அப்படி ஒரு வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மரக்காணம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் சக மாணவர்களை மாணவன் ஒருவர் துடைப்பத்தால் அடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியான வீடியோவில் வகுப்பறையிலிருந்த மின்விசிறி, மின் பெட்டி ஆகியவற்றையும் அந்த மாணவன் அடித்து நொறுக்குகிறான். வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. காலையில் வருகைப்பதிவு எடுத்தவுடனே சில மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே சென்று விடுகின்றனர். அந்த பள்ளியின் பின்பக்கம் முட்புதருக்குள் அமர்வது ஏற்றவாறு குகை போன்ற இடத்தை தயார் செய்து அங்கு அமர்ந்து மது அருந்துவது, புகை மற்றும் கஞ்சா பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 cave behind the school ... Attack on fellow students intoxicated with cannabis ... Startling government school!

அப்படி போதையில் வரும் மாணவர்கள் இப்படி மூர்க்கத்தனமாக சக மாணவர்களிடம் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், கஞ்சா போதையுடன் பள்ளி வரும் சில மாணவர்களை எதிர்த்துப் பேசமுடியாத நிலையே இருக்கிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

marakkanam student
இதையும் படியுங்கள்
Subscribe