Advertisment

காவிரி விவகாரம்: சென்னையில் நடிகர் - நடிகைகள் போராட்டம்

Cauvery

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகிய 3 பேரும் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர்.

Advertisment

அப்போது அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் இப்போது 2 விதமான போராட்டங்கள் நடைபெறுகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி நம் உரிமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகிறார்கள்.

Advertisment

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 25 வருடங்களாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. பொதுவான பிரச்சினை. இந்த 2 பிரச்சினைகளுக்காகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அது உண்ணாவிரத போராட்டமா? அல்லது வேறு மாதிரியான போராட்டமா? என்பதை ஓரிரு நாளில் அறிவிப்போம். நடிகர்-நடிகைகளின் போராட்டம் சென்னையில் நடைபெறும். இவ்வாறு கூறினர்.

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe