கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

cauvery water tamilnadu mettur dam delta opening water raised

மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை (25/09/2019) நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 120.21 அடியாகவும், நீர் இருப்பு 93.81 டி.எம்.சி ஆக உள்ளது.