Advertisment

தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவு!

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆகஸ்ட் மாதம் கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார், கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

 Cauvery Water Regulatory Committee Chairman Naveen Kumar water released raised

நீர்வரத்து குறைவாக இருப்பினும் கிருஷ்ணராஜ சாகர், கபினியில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,014 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4,114 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீரும் தற்போது காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

increase karnataka Mettur Dam water
இதையும் படியுங்கள்
Subscribe