cauvery water opening tamilnadu chief minister mkstalin letter

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (11/06/2021) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதிச் செய்ய வேண்டும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைச் சார்ந்தே காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காவிரி நீர் திறக்கப்படாவிடில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதிச் செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.