தமிழ்நாட்டிற்கான காவிரி நீர்வரத்து உயர்வு!

Cauvery water level rise for Tamil Nadu!

தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து 23,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை, கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.46 அடியாக உயர்ந்துள்ளது; அணையின் நீர் இருப்பு 84.91 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 11,772 கனஅடியிலிருந்து 15,740 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 400 கனஅடியாக இருக்கிறது.

cauvery Mettur Dam Salem
இதையும் படியுங்கள்
Subscribe