தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு!

cauvery water level mettur dam

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று (18/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,318 கனஅடியில் இருந்து 8,160 கனஅடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.46 அடியாகவும், நீர் இருப்பு 62.86 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 18,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

cauvery Mettur Dam water level
இதையும் படியுங்கள்
Subscribe