Advertisment

காவிரி நதிநீர் விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு

Cauvery water issue Tamil Nadu government action decision

Advertisment

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

இந்நிலையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசை ஒரு மனதாக வலியுறுத்தும் இந்தத்தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே அனைத்துக் கட்சி ஆதரவுடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றத்திட்டமிடப்பட்டுள்ளது.

cauvery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe