Cauvery water issue Police DGP alert

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகப்பழைய செய்திகள் மற்றும் வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத்தமிழக போலீஸ் டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காவிரி நதி நீர் பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்களைத்தாக்குகின்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களைத்தற்போது நடந்ததுபோல சித்தரித்து வதந்தி பரப்பி வருகின்றனர். இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாகச் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

Advertisment

இவ்வாறான வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.