கர்நாடகாவில் தற்போது அதிக மழைப்பொழிவு இருந்து வருகின்றது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து வினாடிக்கு 1.07 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்ந்துள்ளது.அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 75.83 அடியாக அதிகரிப்பு; நீர் இருப்பு 37.92 டிஎம்சி உள்ளது.