தமிழகம் முழுக்க பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 112 அடி எட்டியுள்ளது. அணைக்கு வருகிற நீர் தற்போதைய நிலையில் சுமார் 13 ஆயிரம் கன அடி ஏற்கனவே அணை நிரம்பியதால் உபரி நீர் அப்படியே அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் கொடிவேரி மற்றும் காலிங்கராயன் தடுப்பு அணைகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மக்கள் அங்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வெளியேற்றப்படும் 13000 கன அடி நீரும் அப்படியே பவானியில் உள்ள கூடுதுறை என்ற இடத்தில் காவிரி ஆற்றோடு கலந்து வெளியேறுகிறது. அதேபோல் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை தற்போதைய நிலையில் 118. 5 அடி ஆக உள்ளது. அணைக்கு கர்நாடகாவில் இருந்து சுமார் 16000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடகாவின் அணைகளான கபினி ஹாரங்கி கே.ஆர்.எஸ். அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளது. அங்கு வருகிற உபரிநீர் அப்படியே மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. மீண்டும் உபரிநீர் கூடுதலாக வர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். அந்த நிலையில் மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் அப்போது அணைக்கு வருகிற உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் ஏற்கனவே பவானி ஆற்றின் உபரிநீர் மீண்டும் காவிரியாற்றின் உபரிநீர் என தற்போதைய நிலையில் இன்னும் இரண்டு நாளில் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படவுள்ளது. மழை அளவு அதிகரிக்க அதிகரிக்க உபரி நீரின் அளவும் அதிகரிக்கும் இந்த ஆண்டில் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகள் இரண்டு முறை நிரம்புகிறது.
வெளியேறும் உபரி நீர் விவசாய பாசான பகுதிக்கு அந்த அளவுக்கு தேவைப்படுமா அல்லது வீணாககடலில் கலக்குமா என்றால் பெரும்பாலும் கடலுக்கே செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.